• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷிய அதிபர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வருகை தருகிறார்.

இந்தியா - ரஷியா உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு ரஷிய அதிபர் புதினுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில் வருகிறார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள சூழலில் புதின் இந்தியா வருகிறார்.

இந்திய பயணத்தின்போது ரஷிய அதிபர் புதின் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் சீனாவில் நாளை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டின்போதும் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply