• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் MP நிமல் லன்சாவுக்கு விளக்கமறியல் உத்தரவு

இலங்கை

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த நிலையில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் ஒன்றின் போது சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா மீது சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.
 

Leave a Reply