அமெரிக்க தூதுக்குழுவுடன் முக்கிய அரசியல் புள்ளிகள் சந்திப்பு
இலங்கை
அமெரிக்க தூதரகத்தின் அழைப்பின் பேரில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களை அமெரிக்க காங்கிரஸ் பணியாளர் குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சந்திப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க காங்கிரஸ் பணியாளர் குழுவுடன் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற்றன.
ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் கவனம் செலுத்தப்பட்டது.
புதிய அரசியல் சட்ட செயல்முறை, மாகாணசபைத் தேர்தல்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) ரத்து, (LLRC) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தல், செம்மணி மற்றும் நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளில் உள்ள அனைத்து கூட்டு புதைகுழிகள் குறித்து எங்கள் நிலைப்பாடுகளை தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தி கூறினோம். என அவர் தெரிவித்துள்ளார்.






















