அத்துரலியே ரத்தன தேரருக்கு விளக்கமறியல்
இலங்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்தை அடுத்து செப்டம்பர் 12 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 18 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அதியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரரை கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கடந்த காலங்களில் தற்போது தேடி வந்தனர்.
2020 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றதற்காக, அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி, அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் அத்துரலியே ரத்தன தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.























