• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குளியாப்பிட்டிய விபத்து - டிப்பர் லொறியின் சாரதிக்கு விளக்கமறியல்

இலங்கை

குளியாப்பிட்டிய – விலபொல பகுதியில் இரு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேரின் மரணத்திற்கு வழிவகுத்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் லொறியின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விலாபொல சந்தியில் உள்ள பல்லேவெல பாலத்தில் நேற்று (27) காலை ஒரு டிப்பர் லொரியும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேனும் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதியை குளியாப்பிட்டிய பொலிஸார் கைது செய்தனர்.

இவர் அவர் குளியாப்பிட்டிய நீதிவான் ரந்திக லக்மல் ஜயலத் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர், சந்தேகத்திற்குரிய டிப்பர் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட சாரதி 24 மணி நேரத்திற்கும் மேலாக தூக்கமின்றி வாகனம் செலுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட டிப்பர் லொறியின் உரிமையாளருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

Leave a Reply