• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷியாவில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு

உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உலகநாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் போர் தீவிரம் குறையாமல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் ரஷியா மீது உக்ரைன் ராணுவத்தினர் அதிநவீன ஆளில்லா விமானங்களை ஏவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ரஷியாவின் எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளை குறிவைத்து இந்த பொருளாதர சீர்குலைவு தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.

வாகனங்கள் எரிபொருள் நிரம்ப நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகிறது. மேலும் நபர் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவிலேயே எரிபொருள் வழங்கப்படுகிறது. இதனால் ரஷிய மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
 

Leave a Reply