பணத்திற்காக காதலனை மோசடி கும்பலிடம் விற்ற காதலி - பெரும்தொகை கொடுத்து மீட்ட உறவினர்கள்
சீனாவில் பணத்திற்காக தான காதலித்த இளைஞரை மோசடி கும்பலிடம் காதலி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள் விதித்ததால் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந் நிலையில், தற்போது இருக்கும் இளைஞர்களை காதலிக்க வைப்பதற்காகவும், குழந்தைகள் பெற வைப்பதற்காகவும் சீன அரசு போராடி வருகிறது.
பணத்திற்காக காதலனை மோசடி கும்பலிடம் விற்ற காதலி; பெரும்தொகை கொடுத்து மீட்ட உறவினர்கள் ! | China Teenage Girl Sells Boyfriend For Money
இந்நிலையில்தான் காதலித்த இளைஞரையே நைஸாக ஒரு கும்பலிடம் விற்றுள்ளார் பெண் ஒருவர். சீனாவை சேர்ந்த 17 வயது இளம்பெண் சௌ, இவர் ஹாங் என்ற 19 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் ஹாங் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று கூறிய சௌ, மியான்மரில் ஒரு வேலை ஏற்பாடு செய்திருப்பதாக கூற, ஹாங்கும் காதலிக்காக மியான்மர் சென்றுள்ளார்.
மியான்மரில் ஹாங்கை அழைத்துச் சென்ற கும்பல் அவரை அழைத்துச் சென்று அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய பின்னர்தான் தனது காதலி தன்னை இந்த மியான்மர் கும்பலிடம் பணத்திற்காக விற்றுவிட்டார் என்று தெரிய வந்துள்ளது .
பின்னர் அந்த கும்பலிடம் பணம் தருவாதாகவும், தன்னை விட்டுவிடுமாறும் அவர் கேட்க அதற்கு அந்த கும்பல் சம்மதித்துள்ளனர்.
அதன்பின்னர் தனது குடும்பத்தை தொடர்புக் கொண்டு அவர் நடந்தவற்றை கூறிய நிலையில் இந்திய ரூ.42 லட்சம் பணம் கொடுத்து மியான்மர் கும்பலிடம் இருந்து ஹாங்கை மீட்டுள்ளனர் அவரது குடும்பத்தினர்.
























