காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் சேகரித்தபோது ஏரிக்குள் விழுந்த ஹெலிகாப்டர்
பிரான்சின் பிரிட்டனி மாகாணம் ரோஸ்பெர்டன் நகரில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் சேகரித்தபோது ஏரிக்குள் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் சேகரித்தபோது ஏரிக்குள் விழுந்த ஹெலிகாப்டர்; வைரல் வீடியோ | Helicopter Water Extinguish Forest Fire Viralvideo
இந்நிலையில், ரோஸ்பெர்டன் நகரில் உள்ள ஏரியில் இருந்து நேற்று மொரனி 29 ரக ஹெலிகாப்டர் தண்ணீரை சேகரிக்க முயன்றது.
அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் சிறிதுநேரம் வட்டமடைந்து பின்னர் ஏரிக்குள் விழுந்தது. இந்த சம்பவத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
தண்ணீரை சேகரிக்க முயன்றபோது ஹெலிகாப்டரின் அடிப்பகுதி ஏரியில் உள்ள தண்ணீர் மீது உரசியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.





















