• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றம்

இலங்கை

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

“அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்படுகின்ற நிலையில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பொலிஸ் நீர்த்தாரை வாகனங்கள், கலகத் தடுப்பு பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோர் அடங்கிய எதிர்க்கட்சிக் குழு ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்தநிலையில், சிறிய குற்றச்சாட்டுகள் என்று கூறும் இந்த விடயம் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கக் கைது செய்யப்பட்டமை ஜனநாயகத்தின் மீது கடும் விளைவை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும் என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply