ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 50 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான 3 சரீர பிணைகளில் செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து Zoom தொழிநுட்பத்தின் ஊடாக வழக்கு விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி முன்னிலையாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.























