• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் முதல் 2 திரைப்பட விவரங்கள்

சினிமா

நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த தொடக்க விழா பணிகளை ரவி மோகன் கடந்த சில வாரங்களாக செய்து வருகிறார். தொடக்க விழா தற்போது மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது.

விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்தவகையில் கன்னட சூப்பர்ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த விழாவில் கலந்துக் கொண்டார்.

ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர்.

முதல் திரைப்படம்

டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ப்ரோ கோட் என்ற திரைப்படத்தில் தயாரித்து நடிக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இரண்டாவது திரைப்படம்

ரவி மோகன் தயாரித்து இயக்க இருக்கிறார். இப்படத்தின் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.இப்படத்திற்கு ஆர்டினரி மேன் என்ற தலைப்பை வைத்துள்ளனர். இதுக்குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply