அந்த நடிகை மீது முரட்டு காதல்.. இதனால் தான் அவர் பெங்காலி கற்றுக் கொண்டார் - உண்மையை உடைத்த ஸ்ருதி ஹாசன்
சினிமா
கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக கமல் மற்றும் ரஜினி இணைந்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பிரபல பெங்காலி நடிகை மீது தனது தந்தைக்கு காதல் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் பெங்காலி மொழியை படித்து கற்றுக் கொண்டதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். " சினிமாவுக்காக எல்லாம் அவர் பெங்காலி கற்றுக் கொள்ளவில்லை. அப்போது அபர்ணா சென் மீது அவருக்கு காதல். அதனால் தான் ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜீயின் பெயர் அபர்ணா என்று வைத்தார்" என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.























