• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

இலங்கை

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் , நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் கியூ வீதியில் வசிப்பவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே அந்த வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே நீதிமன்ற வழக்கத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியை இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐந்து விசேட வைத்தியர்கள் கொண்ட குழு அவரை கண்காணித்து வருவதுடன்

அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்து அந்தக் குழு பரிந்துரைகளை வழங்கவுள்ளது.
 

Leave a Reply