ரணில் விக்ரமசிங்கவை சூம் தொழிநுட்பத்தின் ஊடாக தொடர்புபடுத்த நடவடிக்கை
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக இன்று (26) நீதிமன்றத்தில் அவரை நேரில் ஆஜர்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு என விசேட வைத்தியர்கள் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வைத்தியர்கள் சபை அறிவித்துள்ளதன் படி நீதிமன்ற உத்தரவுகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சூம் தொழிநுட்பத்தின் ஊடாக தொடர்புபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.























