• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!

இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

குறித்த விசாரணையை நிறைவு செய்த உயர்நீதிமன்றம், அதன் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்த தனது இரகசியக் கருத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேராவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளதுடன் விரிவான மறு ஆய்வுக்குப் பின்னர் , பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில் நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
 

Leave a Reply