• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தூரப் பிரதேச பேருந்துகளுக்கான புதிய அட்டவணை

இலங்கை

இலங்கையில் தூரப் பிரதேச பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பிலிருந்து சிலாபம், புத்தளம், ஆனமடுவ, எலுவான்குளம், கல்பிட்டி, மன்னார், தலைமன்னார், குளியாப்பிட்டி, நிக்கவரட்டிய, அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, காரைநகர் மற்றும் துனுக்காய் ஆகிய பகுதிகளுக்கான  புதிய நேர அட்டவணை அமுல்படுத்தப்படவுள்ளது.

பேருந்து சேவைகள் கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும். அத்துடன் நான்கரை மணி நேர பயணத்திற்குப் பின் ஓட்டுநருக்கு ஓய்வு நிறுத்தம் வழங்கப்படும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply