• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொராண்டோவில் 80 வயது மூதாட்டியை கத்தியால் குத்திய சிறுமி

கனடா

கனடாவின் டொராண்டோ ஒரு 80 வயதுடைய மூதாட்டியை கத்தியால் குத்தியதாக 16 வயது சிறுமி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செப்பர்ட் அவென்யூ கிழக்கு மற்றும் மெக்கோவன் ரோடு பகுதியில் இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான கதவல் கிடைத்ததை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், சிறுமியும் பாதிக்கப்பட்டவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் எனவும் காவல்துறையினர் கூறினர்.

விசாரணையின் விளைவாக, டொராண்டோவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர் மீது கடுமையான தாக்குதல் மற்றும் ஆயுதத்துடன் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் கூடுதல் தகவல்கள் உள்ளவர்கள் பொலிஸாரை தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply