• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மைசூர் சாண்டல் சோப் விளம்பரம் - தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் வழங்கிய கர்நாடக அரசு

சினிமா

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கு இதை கன்னட மக்கள் கடும் எதிர்த்து தெரிவித்து, " ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா?உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் " சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு" என தெரிவித்தார்.

இந்நிலையில், மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடித்த நடிகை தமன்னாவுக்கு 2 வருடங்களுக்கு ரூ.6.20 கோடியை ஊதியமாக வழங்கியுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் சுனில் குமார் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளில் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்காக மட்டும் 48 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply