AGS28 - படத்தில் இணைந்த பிரபலங்கள்! படக்குழு கொடுத்த அப்டேட்
சினிமா
'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் 'ஏஜிஎஸ் 28'.
குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்குகிறார். இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார்.
'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களை வரவேற்கும் வகையில் படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தில் ஜான் கொக்கென், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடிக்கின்றனர்.























