• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (24) அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த துப்பாக்கிச்சூட்டில் கல்கிஸ்ஸையை சேர்ந்த 25 வயதான கிஹான் துலான் பெரேரா எனும் நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் உள்ளிட்ட 09 பேர் பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீதியில் நடந்து சென்றபோது, ​​முச்சக்கர வண்டியில் பிரவேசித்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இரு தரப்பினரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply