• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு நேரத்தில் 1 திரைப்படத்தில் மட்டுமே கமிட் ஆவேன் - கல்யாணி பிரியதர்ஷன் கொடுத்த விளக்கம்

சினிமா

நிவின் பாலி நடித்த நியாண்டுகலுடே நாட்டில் ஒரிடவெலா படத்தின் மூலம் சிறப்பாக அறிமுகமான ஆல்தாஃப் சலீம், அடுத்ததாக ஓடும் குதிரா சாடும் குதிரா படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திரைப்படம் ஓணம் பண்டிக்கையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் கல்யாணி நடித்த லோகா திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருக்கிறது. இரண்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் " நான் அடுத்ததாக கார்த்தி சார் நடிக்கும் மார்ஷல் படத்தில் நடித்து வருகிறேன். இப்படம் நடிப்பதற்கு 4 மாதங்கள் என்னுடைய நேரம் செலவாகும். ஒரே நேரத்தில் 3,4 திரைப்படங்களில் கமிட் ஆக எனக்கு விருப்பமில்லை. ஒரு திரைப்படம் கமிட் ஆனால் அது நடித்து முடித்த பின்பே அடுத்த படத்தில் கமிட் ஆவேன். அப்போது தான் என்னுடைய முழு கவனத்தையும் அந்த கதாப்பாத்திரத்திற்கு கொடுக்க முடியும்" என கூறியுள்ளார்.
 

Leave a Reply