• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் குடியிருப்பாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நீர்க்கட்டணம்

கனடா

கனடாவின் வின்னிபெக் நகரில் வசிக்கும் வனேசா பாக்கியோ என்ற வீட்டு உரிமையாளர், தனது வீட்டுக்கான நீர்க்கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

குறித்த நபரின் நீர்க் கட்டணம் 21000 டொலர்கள் என அறிவிக்கப்பட்டதனால் இவ்வாறு அதிர்ச்சிக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டணத்தை நம்ப முடியவில்லை எனவும் இது மிகப்பெரிய தொகை எனவும் தெரிவித்துள்ளார்.

வழமையாக மூன்று மாத இடைவெளியில் 300 முதல் 800 டொலர் கட்டணம் செலுத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 2025 ஜூலை மாத நீர் கட்டண பட்டியல் 21727.71 டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் மானி வாசிப்பின் அடிப்படையில் இந்த கட்டண அறவீடு குறித்து நகராட்சி அறிவித்துள்ளது.

எனினும் நகராட்சி நிர்வாகம் உரிய முறையில் கட்டண அறவீட்டை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். 
 

Leave a Reply