பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை நீட்டிப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டன. மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானும் தங்கள் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது.
இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை செப்டம்பர் 23 வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.






















