கூலி படத்தின் முதல் வார வசூல் விவரம்
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.
திரைப்படம் தொடர் நான்கு நாட்கள் விடுமுறையில் நல்ல வசூலைப்பெற்றது. ஆனால் வார நாட்களில் வசூல் சிறிது மந்தமாக தொடங்கியது.
திங்கட்கிழமை - 12 கோடி ரூபாய் வசூல்
செவ்வாய் - 9.5 கோடி வசூல்
புதன்- 6.5 கோடி வசூல்
மொத்தமாக முதல் வார இறுதியில் இந்தியாவில் 225.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கூலி திரைப்படம் ரஜினிகாந்த் நடித்து அதிகம் வசூலித்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் எந்திரன் 2.0 - 407 கோடி ரூபாயும், ஜெயிலர் - 348 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் கூலி திரைப்படம் 422.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






















