• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மட்டத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்- சமிந்த விஜேசிறி

இலங்கை

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சரியான திசையில் பயணிக்காவிட்டால், கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க நேரிடும் என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தாதுவிடின் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவும்  ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மேலும் தெரிவிக்கையில் ” அரசாங்கத்தின் இயலாமைக்கு மத்தியில் பல அரசியல் கட்சிகள், இந்த நாட்டை மீண்டும் வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

தந்தையின் பெயரை சொல்லி அரசியல் செய்தகாலம் இப்போது மலையேறி விட்டது. நாட்டில் இன்று அரசியல் டீல்களே காணப்படுகின்றன. எனவே இதிலிருந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மட்டத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்.

அல்லது கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அரசியல் டீல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் கட்சியில் எந்தவொரு பதிவி நிலையில் இருந்தாலும். அவர்களுக்கு எதிராக நான் குரல்கொடுப்பேன். ஐக்கிய மக்கள் சக்தி சரியான மார்க்கத்தில் பயணிக்காவிட்டால் எதிர்காலத்தில் கட்சியில் இருந்து விலகி புதியகட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு நான் பின்நிற்கமாட்டேன். ஏன் என்றால் தனி நபர் ஒருவருக்காக செயற்படவேண்டிய அவசியம் எனக்கில்லை” இவ்வாறு சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply