• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எமது பார்வையில் திருக்குறள்

“எமது பார்வையில் திருக்குறள்”, வட அமெரிக்க இளையோருக்கான பல்துறை ஊடகப் போட்டி – மாணவர்கள் திருக்குறள் என்ற காலத்தால் அழியாத அறிவுச்செல்வத்தை ஆராய, கற்க, மற்றும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான வாய்ப்பை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

6ஆம் சர்வதேச திருக்குறள் மாநாடு 2025 செப்டம்பர் 19–21, கனடாவின் டொரோண்டோவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இணைய வழியாக இந்த திருக்குறள் போட்டி நடைபெறுகிறது.

யார் கலந்து கொள்ளலாம்?

வட அமெரிக்க முழுவதும் ஆரம்பப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை உள்ள மாணவர்கள்.

ஏன் கலந்து கொள்ள வேண்டும்?

திருக்குறளின் ஒழுக்கமும் தத்துவமும் கொண்ட ஆழமான அர்த்தங்களை அறிந்து கொள்ளுங்கள்.

படைப்பாற்றல், பகுப்பாய்வு சிந்தனை மற்றும் வழங்கல் திறன்களை மேம்படுத்துங்கள்.

சர்வதேச கலாசார மாநாட்டில் பாராட்டைப் பெறுங்கள்.

பணப்பரிசு வெல்லுங்கள்:
???? $1,000 – முதல் பரிசு
???? $500 – இரண்டாம் பரிசு
???? $300 – மூன்றாம் பரிசு

எப்படி கலந்து கொள்ளலாம்?

படிப்பு, விவாதம் மற்றும் ஆராய்ச்சி வழியாக திருக்குறளை ஆழமாக அறிந்து கொள்ளுங்கள்.

வழக்குக் குறிப்பை (case study) அடிப்படையாகக் கொண்ட பல்துறை ஊடக வழங்கலைத் தயாரியுங்கள்.

சமர்ப்பிக்கும் கடைசி நாள்: செப்ரம்பர் 10, 2025

நிகழ்ச்சி விவரங்கள்:

போட்டி முடிவுகள்: செப்டம்பர் 19–21, 2025

மேலும் அறிந்து பதிவு செய்ய:
???? முழு விவரங்கள்: https://cflicanada.ca/thirukkural-youth-challenge/
???? கேள்விகளுக்கு: itc2025youthcompetition@gmail.com

உங்கள் மாணவர்களுடனும் குழந்தைகளுடனும் இந்த செய்தியை பகிர்ந்து, தமிழின் பாரம்பரியமும் ஞானமும் கொண்ட இந்த அபூர்வ கொண்டாட்டத்தில் அவர்கள் பங்கேற்க ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்து அடுத்த தலைமுறையை திருக்குறளின் காலமற்ற வழிகாட்டுதலால் வலுவூட்டுவோம்.

இளம் மனங்களை ஊக்குவித்து ஆதரிப்பதற்காக நன்றி!

அன்புடன்,
இளையோருக்கான திருக்குறள் போட்டி நிர்வாகம்
6ஆம் சர்வதேச திருக்குறள் மாநாடு
 

Leave a Reply