• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடு முழுவதும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் இன்று (20.08.2025) முழுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக முன்றலில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்கலைக்கழக செயற்பாடுகள் முழுமையாக முடங்கின.

ஊழியர் சங்கத் தலைவர் சி. எம். முனாஸ் தலைமையில் நடைபெற்ற இப்பணிப்பகிஷ்கரிப்பில், பல்வேறு கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள் பேரணியாக ஒலுவில் பிரதான வீதி வரை ஊர்வலமாகச் சென்றனர்.

நீண்டகாலமாக நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து, அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் இந்த முழுநாள் அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.

பொதுச் செயலாளர் எம். எம். முகம்மது காமில் உள்ளிட்ட சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், நூற்றுக்கணக்கான கல்விசாரா ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply