• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை இராணுவ தடகள வீரர் அருன்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் சாதனை

இலங்கை

2025ஆம் ஆண்டுக்கான இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவத்தின்  மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீற்றர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி தேசிய அளவில் புதிய  சாதனையைப் படைத்துள்ளார்.

ஆகஸ்ட் 18 முதல் 20 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறும் இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தல்  போட்டியிலேயே அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை இராணுவ சாதனை மற்றும் இலங்கை இராணுவ தடகள சாம்பியன்ஷிப் சாதனை இரண்டையும் புவிதாரன் தக்கவைத்துக் கொண்டார்.
 

Leave a Reply