• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கட்டுநாயக்க கருமபீடம் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு ‍1,338 சாரதி அனுமதி பத்திரங்கள் விநியோகம்

இலங்கை

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நிறுவப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 3 ஆம் திகதி அமைக்கப்பட்ட பிரத்தியேக உரிமம் வழங்கும் கருமபீடம், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 3 முதல் 17 வரை மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டன.

முன்னதாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற வெராஹெராவில் உள்ள DMT அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.

இதற்கிடையில், தேசிய சுற்றுலா சாரதிகள் சங்கம் இந்த முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

2,000 ரூபாவுக்கும் குறைவான விலையில் வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொழில்முறை சுற்றுலா சாரதிகளின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டுகிறது.
 

Leave a Reply