• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

இலங்கை

ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்றைய தினம் (20) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நாடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது, நீக்கிவிடப்பட்ட 20% ஐ உடனடியாக வழங்கு, அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்கு, மக்களாட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தையைத் தவிர்த்து வருகிறது, அதிகரிக்கப்பட்ட வரவு செலவு முன்மொழிவுகளுக்கு பல்கலைக்கழகங்கள் தகுதி இல்லையோ? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 

Leave a Reply