• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பானில் தீவிர சோதனை - 1,600 வகையான பொருட்கள் விற்பனைக்கு தடை

இலங்கை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நாடு முழுவதும் நடத்திய சோதனை சுமார் 1,600 உணவுப்பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அப்போது அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் காலாவதியான உணவுப்பொருள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கியோட்டோ, ஓசாகா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தீவிர சோதனை நடைபெற்றது.

அப்போது 20-க்கும் மேற்பட்ட கடைகளில் காலாவதியான பொருட்கள் மீது போலியான ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்தது உறுதியானது.

இதனையடுத்து நாடு முழுவதும் சுமார் 1,600 உணவுப்பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply