மதராஸி கதாப்பாத்திரம் ஷாருக்கானிற்கு மிகவும் பிடித்திருந்தது - ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக்
சினிமா
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர் முருகதாஸ் கூறியதாவது " இப்படத்தில் சிவகார்த்திகேயன் ரகு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு சாதாரண மனிதனில் இருந்து சிறுது அப்பாற்பட்ட கதாப்பாத்திரமாகும். இந்த கதாப்பாத்திரத்தின் சிந்தனையை நான் 7 வருடங்களுக்கு முன்பு ஷாருக்கானுக்கு கூறினேன் அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. அப்பொழுது உள்ள சூழ்நிலையில் அது நடக்காமல் போனது. மதராஸி படத்தின் நேரளவு 2 மணி நேரம் 45 நிமிடங்களாகும். இக்கதை சிவகார்த்திகேயனுக்கு சரியாக இருக்கும் என அவரை வைத்து இயக்கினேன்" என கூறினார்.























