• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லிப்லாக் வீடியோவை பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவி

சினிமா

மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களில் திருமண பண்டிகைகளுக்கு கேட்ரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் தான்.

அது மட்டுமல்லாமல் தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் இருக்கிறார். அவருடைய முதல் படம் 'மெஹந்தி சர்கஸ்'. ஆனால் அவரை மக்கள் அதிகமாக அறிந்தது 'Cook with Comali' நிகழ்ச்சியின் மூலமாக.

மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் 2-வது திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இவர் ஃபேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை திருமணம் செய்துக் கொண்டார். ஜாய் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.

மேலும் திருமணம் செய்துகொண்ட உடனேயே கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார். திருமணம் செய்துகொண்ட உடனே 6 மாத கால கர்ப்பமா? என்று இந்த விவகாரம் நெட்டிசன்களிடையே பேசுபொருளானது.

இதனையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் கிரிஸ்ல்டா இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படம் மற்றும் இருவரும் லிப் லாக் செய்து கொள்ளும் புகைப்படத்தையும் சேர்த்து ஒரு வீடியோவாக கிரிஸ்ல்டா பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் எனக்காக பிறந்தாயே எனதழகி என்ற பாடலை பேக்ரவுண்ட் மியூசிக்காக வைத்துள்ளார். இந்த வீடியோவை எடிட் செய்தது தனது கணவர் ரங்கராஜ் எனவும் இந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுள்ளார்.

இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசின்கள தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
 

Leave a Reply