5.94 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
இலங்கை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5.94 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
டுபாயிலிருந்து குறித்த சிகரெட்டுகளை வாங்கியவர்கள் குவைத் விமானத்தினூடாக இலங்கைக்கு வந்துள்ள நிலையில் வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெரிய பொதியுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த 33, 45 வயதான தொழிலதிபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் 39,600 சிகரெட்டுகள் அடங்கிய 198 அட்டைப் பெட்டிகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்துள்ளன.
இதேவேளை, சந்தேக நபர்களும் கடத்தப்பட்ட சிகரெட்டுகளும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.























