வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராட சென்றிருந்த இளைஞர் உயிரிழப்பு
இலங்கை
யாழ் – வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்றிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் தமது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்பது நண்பர்கள் இணைந்து உழவு இயந்திரத்தில் பளை கரந்தாய் பகுதியில் இருந்து தாளையடி கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
இதன்போது அவர்கள் கடலில் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்த வேளை அவர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து குறித்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் உயிரிழந்த இளைஞரின் நண்பர்களிடம் வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























