அட்லி - அல்லு அர்ஜூன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்
சினிமா
'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தமிழ் படங்களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி, பாலிவுட் சினிமாவிலும் அசத்தினார். ஷாருக்கான்-நயன்தாரா கூட்டணியில் அவர் இயக்கிய 'ஜவான்' படம் ரூ.1,000 கோடியை தாண்டி வசூல் குவித்து சாதனை படைத்தது.
அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.






















