மதுரை த.வெ.க. மாநாட்டிற்கு அஜித் ரசிகர்கள் வைத்த வரவேற்பு பேனர் சமூக வலைதளங்களில் வைரல்
சினிமா
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ள பாரபத்தியில் வரும் 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் மாநாட்டுக்கு வருகை தரும் பொது மக்களை வரவேற்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமான பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அச்சடித்து மாநகர், புறநகர் பகுதிகளில் ஒட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே த.வெ.க. மாநாடு நடைபெறும் கிராமமான பாரபத்தியில் அங்குள்ள அஜித், விஜய் ரசிகர்கள் அஜித் நடித்து பெரும் வெற்றி பெற்ற படங்களான அட்டகாசம், பில்லா, அமர்க்களம், ஆரம்பம், தீனா உள்ளிட்ட அஜித்தின் படங்களுக்கு நடுவே விஜய்யின் படத்தையும் வைத்து பேனர் அச்சடித்துள்ளனர்.
அதில் மதுரை மாநாடு "ரெடி மாமே" என்ற வசனமும் எதிர்கால தமிழ்நாடு என்ற வசனத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பேனர்கள் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அஜித் ரசிகர்கள் விஜய் மாநாட்டிற்கு வைத்துள்ள பேனர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.























