• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Ghaati படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்

சினிமா

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.

அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இரண்டாம் பாடலான தசரா வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
 

Leave a Reply