கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு
இலங்கை
கடலோர மார்க்கமூடான ரயில் சேவையில் இன்று (18) காலை தாமதம் ஏற்பட்டது.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று காலை மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதால் இந்த நிலை ஏற்பட்டது.
காலி-மருதானை பாதையில் இயக்கப்பட்ட ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.






















