வேலை நிறுத்தம் தொடரும் என எயார் கனடா பணியாளர்கள் அறிவிப்பு
கனடா
வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என எயார் கனடா விமானப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசாங்கத்தினால் பணிக்கு திரும்புமாறு பிறப்பித்த உத்தரவு “அரசியலமைப்புக்கு முரணானது” என தொழிற்சங்கம் விமர்சித்துள்ளது.
பணிகளை தொடருமாறு பிறப்பித்த உத்தரவை மறுத்து வேலைநிறுத்தத்தை தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எயார் கனடா இன்று மாலை விமானங்களை மீண்டும் இயக்க திட்டமிட்டிருந்தது. சனிக்கிழமை 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 100,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
1985-க்குப் பிறகு முதல் முறையாக பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், இது பல மாத ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது.























