சிக்கந்தர் பட தோல்விக்கு நான் பொறுப்பல்ல, அவர்கள் தான் - ஏ.ஆர்.முருகதாஸ்
சினிமா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கினார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். திரைபப்டம் வெளியாகி மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சிக்கந்தர் படத்தின் தோல்வியை குறித்து ஏ. ஆர் முருகதாஸ் கூறியபோது "சிக்கந்தர் படத்தின் கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ஆனால் நான் நினைத்த கதையை என்னால் திரையில் கொண்டு வரமுடியவில்லை. அதற்கு நான் மட்டும் பொறுப்பாக முடியாது அதற்கு படக்குழுவும் ஒரு காரணம், ஆதிக்கம் செலுத்தும் வகையில் என்னிடம் ஒரு யூனிட் மற்றும் குழு இருந்தால் அதை சாத்திய படுத்திருக்கலாம். அதனால் இது என்னுடைய தோல்வியல்ல" என கூறியுள்ளார்.























