3 நாளில் தாறுமாறு வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி...
சினிமா
இந்த 2025ம் ஆண்டோடு திரை வாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்தப் பொன் விழா ஆண்டில் வெளியான படம் தான் கூலி, பான் இந்தியா அளவில் இப்படம் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினியுடன் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார்.
மேலும் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின், ஸ்ருதிஹாசன் என பலர் நடித்துள்ளனர்.
கூலி படம் முதல் நாளில் ரூ. 151 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படம் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
தற்போது இப்படம் 3 நாளில் உலகம் முழுவதும் ரூ. 310 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.























