• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெலிந்த தேகத்தின் ரகசியம் சொல்லும் கீர்த்தி சுரேஷ்

சினிமா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்துக்குப் பிறகும் படங்கள் நடித்து வருகிறார். தற்போது தமிழில் 'ரிவால்வர் ரீட்டா', 'கன்னிவெடி' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கிலும் புதிய படங்கள் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகு பூசினாற் போல இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கடுமையான உடற்பயிற்சிகள் செய்தும், உணவு கட்டுப்பாட்டுகளை (டயட்) கடைபிடித்தும் தனது உடல் எடையை வெகுவாக கட்டுப்படுத்தி இருக்கிறார்.

இதற்கிடையில் உடல் எடை குறைத்த ரகசியத்தை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

"திருமணத்துக்குப் பிறகு உடல் எடை சற்று கூடிவிட்டேன். இதனால் கார்டியோ உள்ளிட்ட பயிற்சிகளை செய்து உடல் எடையைக் குறைக்க போராடினேன். வாரத்துக்கு 300 நிமிடங்கள் அடிப்படையில் உடற்பயிற்சி செய்து சுமார் 9 கிலோ எடையைக் குறைத்து இருக்கிறேன்.

சரியான பயிற்சிகளும், திட்டமிட்ட உணவு பழக்கங்களும் ஒன்று சேரும்போது எதிர்பார்த்த தீர்வை பெற முடியும். ஆண்களைப் போல பெண்களும் உடற்பயிற்சியில் அக்கறை காட்டுவது நல்லது" என்று கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டார்.
 

Leave a Reply