சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி - பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி
சினிமா
நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையே ரஜினி திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை பலரும் அவரருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "சினிமா உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அவரது பயணம் ஒரு சிறப்புமிக்க அனுபவம், அவரது மாறுபட்ட வேடங்கள் தலைமுறை தலைமுறையாக மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.























