இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகளால் இலங்கையின் கடற்கரைகள் பாதிப்பு
இலங்கை
தென்மேற்கு பருவகாற்று காரணமாக, இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் இலங்கையின் கடற்கரைகளில் சேருவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறிப்பாக கல்பிட்டி, நீர்கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் நெடுந்தீவு கடல் பகுதிகளில் இந்த கழிவுகள் பெரும்பாலும் கரைத்தட்டுவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் குறித்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.























