• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாக்குமூலம் வழங்கியபின் CIDயில் இருந்து வெளியேறினார் விமல் வீரவன்ச

இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 3 மணிநேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவை, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்காக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் (15) காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடவுச்சீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது சுமத்தப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை செய்து வரும் தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாக அண்மையில் விமல் வீரவன்ச கூறியிருந்தார் .
 

Leave a Reply