எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் - ரஜினியின் உருக்கமான பதிவு
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் இதுவரை 170 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினி திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை பலரும் அவரருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு எல்லாம் நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் " அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.























