பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்
இலங்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காரணமாக இன்று கொழும்பில் காலமானார்.
வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வைத்தியர் சுதர்சனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.























