• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இரண்டு நண்பர்களுக்கு கிட்டிய அதிர்ஷ்டம்

கனடா

கனடாவில் இரண்டு நண்பர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளனர். வின்னிபெக்கைச் சேர்ந்த இரு நண்பர்கள், பல ஆண்டுகளாக லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்து வந்துள்ளனர்.

அண்மையில் இந்த இரண்டு நண்பர்களும் இரண்டு மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றுள்ளனர். அவா போபியாக் மற்றும் அஸிஸ் ஷிராஸி ஆகியோர், கடந்த ஜூன் 17 ஆம் திகதி நடந்த வெஸ்டர்ன் மேக்ஸ் லாட்டரி சீட்டிலுப்பில் அவர் இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.

ஒரே வீட்டில் வசிக்கும் இந்த நண்பர்கள் லொத்தர் சீட்டிலுப்பு வெற்றி மூலம் பெரு மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

பரிசுத் தொகை 20,000 என நினைத்ததாகவும், அதற்காகவே மிகவும் உற்சாகமாக இருந்ததாகவும் ஷிராஸி தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு சென்று, ஒரு மில்லியனில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளன என்பதை கூகுளில் தேட வேண்டியிருந்தது. கூகுள் நான் 2 மில்லியன் டாலர் வென்றதாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நண்பர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் சமையலறைகளில் பணிபுரிந்து வந்தவர்கள் என்றும், புதிதாக வென்ற பணத்தை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து யோசித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

ஷிராஸி, தனது சொந்த உணவகத்தை திறக்கவும், தனக்கென ஒரு இடத்தை வாங்கவும், ஒருவேளை புதிய கார் வாங்கவும் விரும்புவதாகக் கூறியுள்ளார்.

போபியாக், தனது வெற்றிப் பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என இன்னும் யோசித்து வருவதாகக் கூறியுள்ளார்.

நான் பெரும்பாலும் ஓய்வுக்காலத்திற்காக சேமிக்க விரும்புகிறேன், மேலும் ஒரு புதிய கார் வாங்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply