கூலி திரைப்படத்திற்கு எதற்கு A சான்றிதழ்? - ரசிகர்கள் கேள்வி
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ரசிகர்கள் திரையரங்கை அதிரவிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்து வைத்தது போல் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது. அதாவது 18 வயதிற்கு மேல் உள்ள நபர்களே இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியும்.
படத்தை பார்த்துவிட்டு வந்த பல ரசிகர்கள் எதற்கு இப்படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கினார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தில் அப்படி ஒரு ஆபாச காட்சியோ, ரத்தம் தெறிக்கும் வயலன்ஸ் காட்சிகளோ இல்லை. பிறகு ஏன் ஏ சான்றிதழ் என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.























